Friday, August 10, 2012

தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

ஐந்து மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சிமடத்தில் துவங்கப்பட்ட மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம்

 இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பொய்வழக்கில் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐந்து மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சிமடத்தில் துவங்கப்பட்ட மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம், நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, மீனவர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இன்று அரசிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி சென்றதாக, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லேங்லட் ஆகியோரை இலங்கை போலீசார், மல்லாகம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 22ல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து ஐந்து மீனவர்களும் மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.