Monday, January 02, 2012

ராமேஸ்வரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய பயணிகள் ரயில்

புத்தாண்டு பரிசாக தங்கச்சிமடம் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மிக அதிக பேருந்து கட்டண உயர்வால்.. தங்கச்சிமட மக்கள் ரயிலை மட்டுமே தங்களுடைய தொலை  தூர பயணங்களுக்கு பயன்படுத்துகின்றனர். ரயில்வே நிர்வாகமும் இதுவரை மக்கள் பயன் பெரும் வகையில் ராமேஸ்வரம் முதல் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு பயணிகள் ரயிலை இயக்கி கொண்டுருந்தது, ஆனால் மதுரை யை அடுத்து பழனிக்கோ, திண்டுகல்லுக்கோ செல்ல மக்கள் பேருந்துகளையே நம்பி  இருந்தனர். எனவே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையே நிறைவேற்றும் பொருட்டு இந்த புதிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


திண்டுக்கல்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் விரைவில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போர்டு கூடுதல் உறுப்பினர் ஏ.கே.சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் கோயல் நிருபர்களிடம் கூறியது: நவீன கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். மதுரை-திண்டுக்கல் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சிப்புளி, கமுதக்குடியில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

மேலும், அகற்றிய தங்கச்சிமட ரயில்வே நிலையத்தை மீண்டும்  நிறுவ தெற்கு ரயில்வேக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.