Sunday, September 15, 2013

கச்சத்தீவு - ஓர் அறிமுகம்


தமிழர்கள் இழந்து கொண்டிருக்கின்ற உரிமைகளில் தலையாயது 'கச்சத்தீவு'.  மற்ற உரிமைகள் நம்மை அறியாமல் நம் கை விட்டு விலகி சென்றன ஆனால் கச்சத்தீவை நமது நடுவண் அரசு நம் கைகளிருந்து பறித்து இலங்கை அரசுக்கு தாரை வார்த்து விட்டு  தனது காலடியிலுள்ள தென் தமிழ் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை புறங்கையால் அலட்சியமாக தள்ளியது.
அரசியலைப் பொறுத்த வரை கச்சத்தீவு ம் காவிரியைப் போல தேர்தல் கால வாக்குறுதிகளுள் ஒன்று. கன்னியாகுமரிலிருந்து புதுச்சேரி வரை பரவிருக்கும் மீனவ மக்களின் குறிப்பாக நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட மீனவ மக்களின் வாக்கு வங்கியை சொந்தமாக்கவே 'கச்சத்தீவை மீட்போம்' என்ற நோக்கமற்ற குரல்கள் தேர்தல் காலங்களில்உரக்க கேட்கும், ஆனால் இன்று வரை டெல்லியை எட்டவவில்லை என்பது வேதனைக்குரியது.
தலைநகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகள் ஒட்டு மொத்த பாரத்தை யை அசைத்துப் பார்க்கும் போது 6 மாவட்ட மக்களின் வாழ்க்கை சற்றும் கூட சலனப் படத்தவில்லை என்பது அவர்களின் விதியா?
கச்சத்தீவு - பூகோள வரைபடம்
Kachchatheevu_Map