Wednesday, November 14, 2012

நோயின் கோரப் பிடியில் தங்கச்சிமடம்!

 
நண்பர்களே, இந்த தீபாவளி தங்கச்சிமடம் மக்களுக்கு  துயர தீபாவளி யாக இருந்திருக்கும். 
மலேரியா, டபுள் மலேரியா, டெங்கு இன்னும் பல பெயர் தெரியாத நோய்களுக்கு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் ஆட்பட்டு அவதிப்படுகின்றனர்.
 மக்களிடம் நோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை ! ஆனால் அதில் கொஞ்சங் கூட அக்கறை கொள்ளாமல் அரசு இயந்திரம் தூங்குகிறது. இதை நன்றாக பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன!!! 
தங்கச்சிமடத்தை பெயர் தெரியாத தோற்று நோய்கள் கொஞ்ச கொஞ்சமாக அரிக்க துவங்குகிறது! இதை நாம் இப்பவே தடுத்த நிறுத்தாவிடில் அது நமக்கான பெரிய இழப்பில் கொண்டு சென்று விடும். 

நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் தங்கச்சிமடத்தை நோயின் அரக்க பிடியிலிருந்து விடுவிக்க ?

நான் இன்று தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு  மற்றும் குடும்ப த்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜய் அவர்களை தொடர்பு கொண்டு இதை பற்றி விரிவாக எடுத்துரைத்தேன், அவரும் பொறுமையாக கேட்டு விட்டு 'இணை இயக்குனரிடம் (JD) ' சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 
மேலும் நமது மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு  மற்றும் குடும்ப த்துறை இயக்குனருக்கும் ஈமெயில் செய்துள்ளேன்.

Minister Of Health : Dr.V.S. Vijay (Phone:  25670682 (O), 24620002 (R))
Secretary : Dr J. Radhakrishnan IAS (Phone:  25671875 (O), 24795238 (R), 25671253 (Fax)
                     Email: hfsec@tn.gov.in )
Ramanthapuram District Collector : Thiru K Nanthakumar IAS (Phone : 231220(O), Email: collrrmd@tn.nic.in )

Saturday, September 22, 2012

Jesus appeared in Thangachimadam Infant Jesus Temple

தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலயத்தில் இயேசு தோன்றி மறைந்ததாக பரபரப்பு.

(சம்பவம்  நிகழ்ந்தது - திங்கள்கிழமை, ஜூன் 7, 2010)
 
தங்கச்சிமடம் அற்புத குழந்தை ஏசு ஆலயத்தில் ஏசுநாதர் தோன்றி மறைந்ததாக பக்தர்கள் கூறியுள்ளனர்.ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அற்புத குழந்தை ஏசு ஆலயம் கடந்த ஏப்ரல் 18 ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் பக்தர்கள் கடந்த 2 மாதமாக சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இப் பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் என்பவர் வழிபாடு செய்தார். அவர் பிரார்த்தனை முடித்து கண்விழித்து பார்த்த போது சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரைதளத்தில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி மாறி வந்து சென்றாக கூறினார்.

இதைப் பார்த்து அதிசயித்த மாணவர் ஜனார்த்தனன் ஓடிச்சென்று அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் இந்த அதிசயத்தை பார்த்தாக கூறப்படுகின்றது.

இத் தகவல் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்களும் இந்த அதிசயத்தை நேரில் பார்த்தாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் தங்களது செல்போன், கேமராக்கள் மூலம் படம் எடுத்தும் சென்றனர்.

வீடியோ காட்சி:
   

இந்த அதிசயம் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் அந்த சர்ச்சுக்கு பெருமளவில் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Friday, August 10, 2012

தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

ஐந்து மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சிமடத்தில் துவங்கப்பட்ட மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம்

 இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பொய்வழக்கில் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐந்து மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கச்சிமடத்தில் துவங்கப்பட்ட மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம், நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, மீனவர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இன்று அரசிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி சென்றதாக, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லேங்லட் ஆகியோரை இலங்கை போலீசார், மல்லாகம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 22ல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து ஐந்து மீனவர்களும் மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.



Monday, February 13, 2012

Thangachimadam Students - Free Technician Training

தங்கச்சிமடம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  - இலவச தொழிற் பயிற்சி சேர்க்கை 

கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இளைஞர் நலன் மற்றும் மேம்பட்டு திட்டத்தின் கீழ் மூன்று மாத  இலவச தொழிற் பயிற்சி யை நடத்துகிறது.

என்னென்ன தொழிற்பயிற்சிகள்:
  • வெல்டிங் 
  • டீசல் மெக்கானிசம் 
  • கார் ட்ரைவிங்
  •  ஜேசிபி ட்ரைவிங்                        
தகுதி:
  • 18  முதல் 35 வயது உள்ளவராக இருக்க வேண்டும்
  •  பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்
விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு சான்றிதழுடன், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வுடன் குடும்ப அட்டை நகலையும் கொண்டு வரவும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தினமும் ரூ. 35 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

மொபைல் எண்: 94433 82700

முகவரி:
Mohamed Sathak Polytechnic College
Kilakarai 623 806, Ramnad Dist
Tamil Nadu ,India.
Phone:04567-241392


Monday, January 02, 2012

ராமேஸ்வரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய பயணிகள் ரயில்

புத்தாண்டு பரிசாக தங்கச்சிமடம் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மிக அதிக பேருந்து கட்டண உயர்வால்.. தங்கச்சிமட மக்கள் ரயிலை மட்டுமே தங்களுடைய தொலை  தூர பயணங்களுக்கு பயன்படுத்துகின்றனர். ரயில்வே நிர்வாகமும் இதுவரை மக்கள் பயன் பெரும் வகையில் ராமேஸ்வரம் முதல் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு பயணிகள் ரயிலை இயக்கி கொண்டுருந்தது, ஆனால் மதுரை யை அடுத்து பழனிக்கோ, திண்டுகல்லுக்கோ செல்ல மக்கள் பேருந்துகளையே நம்பி  இருந்தனர். எனவே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையே நிறைவேற்றும் பொருட்டு இந்த புதிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


திண்டுக்கல்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் விரைவில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போர்டு கூடுதல் உறுப்பினர் ஏ.கே.சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் கோயல் நிருபர்களிடம் கூறியது: நவீன கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். மதுரை-திண்டுக்கல் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சிப்புளி, கமுதக்குடியில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

மேலும், அகற்றிய தங்கச்சிமட ரயில்வே நிலையத்தை மீண்டும்  நிறுவ தெற்கு ரயில்வேக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.